பெரம்பலூர் மாவட்ட கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தினர், மாவட்ட தலைவர் செல்வக்குமார் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு சார்பில் நபார்டு வழங்கும் மானியத் தொகையை வழங்க வேண்டும்,
ஆயிரம் கோழி வளர்ப்புத் திட்டம், கோழிப்பண்ணையாளர்கள் அனைவருக்கும், வழங்க கோரியும்,
கோழி வளர்ப்பிற்கு ரூ.10 ரூபாய் கிலோ ஒன்றுக்கு கூடுதலாக வழங்க கோரியும், அவ்வாறு தவறும் பட்சத்தில், வங்கி கடனை முழுமையாக ரத்து செய்யக் கோரியும், இன்று நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 300 பேர் மேற்கொண்டனர்.