Perambalur: Officials are at a loss to impose fines on ruling party members who pasted posters on government buses
பெரம்பலூர் பணிமனைக்கு உட்பட்ட அரசு பேருந்து மீது போஸ்டர் ஒட்டிய ஆளும் கட்சியினரிடம் அபராதம் வசூலிக்க தெரியாமல் தவித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனை தங்கள் பங்கிற்கு மகிழ்ச்சியை வெளிபடுத்த முயன்றவர்கள் அரசு பேருந்து மீதே ஒட்டி உள்ளனர்.
போக்குவரத்து அதிகாரிகளோ அப்பாவிகள் யாரோ தவறுதலாக செய்து விட்டால் அவர்களிடம் காவல்துறை மூலமாகவோ, நேரடியாகவோ அபாரதம் நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் ஆளுங்கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளதால் ரூ: 5ஆயிரத்தை வசூலிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதே அதிகாரிகள் பணியாளாகிளடம் யாராவது உன் முதுகிலே போஸ்டர் ஒட்டினால் விட்டுவிடுவாயா என கேட்பார்கள்!
இப்போது பணியாளர்கள் அதிகாரிகளை கேள்வியை திருப்பி கேட்கின்றனர்