Perambalur: One person died when a tipper truck driven by a college student lost control and collided with it! 4 share autos damaged!! 4 people injured!!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே இன்று மதியம் நடந்த விபத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அசூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் சூர்யா (20), பெரம்பலூர் தனியார் கல்லூரியில் பி..இ 2ம் ஆண்டு படித்து வருகிறார். அவரது தந்தை நடத்தி வரும் சூர்யா ஏஜன்சியில் இருந்து, 1 1/2 யூனிட் ஜல்லி ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரியில் ஆலம்பாடி நோக்கி செனறுக் கொண்டிருந்தார்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் மீதும், பயணிகளை ஏற்ற நின்ற 4 ஷேர் ஆட்டோக்கள் மீதும் மோதியது. இதில் பெரம்பலூர் கேந்திர வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அன்மோல் ஜூனோஜா (31) அவர் சம்பவ இடத்திலே பலியானார் . கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 25.12.23 ந் தேதி ஆசிரியராக பணியில் சேர்ந்துள்ளார்.

திருவளக்குறிச்சியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராமச்சந்திரன் (35), கெண்டைக்காலில் ரத்தக்காயமும், பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு சமத்துவபுரத்தை சேர்ந்த புகழேந்தி மகள் பிரியா (18) தலை, இரண்டு கால் முட்டிகளில் இரத்தக்காயமும், பெரம்பலூர் திருநகரை சேர்ந்த சுப்பிரமணியன் (80), இடுப்பு, வலது காலில் உள் காயமும், சுப்பிரமணியன் மனைவி கருப்பாயி (78) இடது பக்க தலையில் இரத்தக்காயம் ஏற்பட்டது.

காயமானவர்களை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரம்பலூர் போலீசார் இறந்த ஆசிரியரின் உடலை உடற்கூறு ஆய்விற்காக, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்திற்கு காரணமான கல்லூரி மாணவர் சூர்யாவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!