Perambalur Parliamentary Constituency Candidates who voted!
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அவரவர் வசிக்கும் பகுதிகளில் வாக்களித்தனர்.
தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஐஜேகே பாரிவேந்தர் சென்னையில் உள்ள வளசரவாக்கத்திலும், திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும், அருண்நேரு திருச்சி மாவட்டம், லால்குடி அருகே காணக்கிளியநல்லூரிலும், அதிமுக சார்பில் இரட்டை இலை சார்பில் போட்டியிடும் சந்திரமோகன் பெரம்பலூர் துறைமங்கலத்திலும் இன்று வாக்களித்தனர்.
இதே நாம் தமிழர் கட்சியின் மைக் சின்ன வேட்பாளர் தேன்மொழி தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியிலும்,
சுயேட்சை வேட்பாளர் ரெங்கராஜ் பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் அருகே உள்ள முஹமதுபட்டினத்திலும் வாக்களித்தனர். மற்ற சுயேட்சை வேட்பாளர்களும், அவர்களது சொந்த ஊரில் வாக்களித்தனர்.