Perambalur Parliamentary elections: Voting machines with safety lock sealing!

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் யைமான தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் நர்சிங் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் மற்றும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியின் பொதுப் பார்வையாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா மாவட்ட காவல் கண்கானிப்பாளர் திஷாமித்தல் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பாதுகாப்புடன் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2019 தேர்தல் அட்டவணை 10.03.2019 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்கும் நேற்று 18.04.2019 தேர்தல் நடைபெற்றது, அதன்படி பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை, முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் பயன்படுத்தப்ட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

தனலட்சுமி நர்சிங் கல்லூரியின் தரை தளத்தில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்ட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களும், முதல் தளத்தில் குளித்தலை சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்ட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களும், இரண்டாம் தளத்தில் முசிறி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்ட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தனலட்சுமி பாலிடெக்னிக் கல்லூரியின் தரை தளத்தில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்ட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களும், முதல் தளத்தில் துறையூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்ட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களும், இரண்டாம் தளத்தில் லால்குடி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்ட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மேலும் நேற்று 18.04.19 பதிவான வாக்குகள் அனைத்தும் 23.05.19 அன்று வாக்கு எண்ணும் மையமான தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் எண்ணப்பட உள்ளது. வாக்கு எண்ணும் பணி காலை 08.00 மணிக்கு துவங்கி, முதலில் அஞ்சல் வாக்குகள் தேர்தல் நடத்தும் அலுவலரின் முன்னிலையில் எண்ணப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து மிண்ணனு வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை பல்வேறு சுற்றுகளாக எண்ணப்பட உள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்ட்டுள்ள பகுதியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, வளாகம் முழுவதும் கண்கானிப்பு கேமராக்கள் மூலம் கண்கானிக்கப்பட உள்ளது. இக்கண்கானிப்பு பணிகளில் 50 எண்ணிக்கையிலான துணை இராணுவ படையினர் மூலமாக உள்ளேயும், 40 எண்ணிக்கையிலான தமிழக சிறப்பு காவல் படையினர், 30 எண்ணிக்கையிலான ஆயதப்படை காவலர்கள் மற்றும் 20 எண்ணிக்கையிலான உள்ளூர் காவலர்கள் என மொத்தம் 140 நபர்கள், பணிகளை சுழற்சி முறையில் மேற்கொள்ள உள்ளனர். மேலும் வாக்கு எண்ணும் மையம் தகுந்த பாதுகாப்பு வசதிகளுடனும், அடிப்படை வசதிகளுடனும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!