Perambalur Parliamentary General Election; District Election Officer informs candidates to file expenditure accounts!
பாராளுமன்றப் பொதுத் தேர்தல்-2024ல் 25. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது தலைமை முகவர்கள் தேர்தல் செல்வின கணக்குகளை 01.04.2024, 10.04.2024 மற்றும் 16.04.2024 ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தேர்தல் செலவின பார்வையாளர்கள் முன்பாக 3 கட்டமாக ஆய்வுக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் (இரண்டாம் தளம்) தேர்தல் செலவின பார்வையாளர் முன்னிலையில் ஆய்வு செய்யப்படவுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து 30.03.2024 வரை உள்ள செலவின கணக்குகள் 01.04.2024 அன்றும், 31.03.2024 முதல் 08.04.2024 அன்று முடிய உள்ள செலவின கணக்குகள் 10.04.2024 அன்றும், 09.04.2024 முதல் 13.04.2024 அன்று முடிய உள்ள செலவின கணக்குகள் 16.04.2024 அன்றும் ஆய்வு செய்யப்படவுள்ளது.
தேசிய / மாநில அளவிலான அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்களின் கணக்குகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் கணக்குகள் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரையும், ஏனைய வேட்பாளர்களின் கணக்குகள் பிற்பகல் 02.30 மணி முதல் 05.00 மணி வரையிலும் ஆய்வு செய்யப்படும்.
எனவே, பாராளுமன்றப் தேர்தல்- 2024-ல் 25, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் / முகவர்கள் தவறாது ஆஜராகி தேர்தல் செலலின் அறிக்கை தாக்கல் செய்யுமாறும், செலலினங்களினில் எவ்வித விடுபாடுகளுமின்றி முழுமையாக செலவினம் / பதிவேடுகள் கணக்கு அறிக்கையினை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.