பெரம்பலூர் அருகே தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர்கள் தங்கள் மீதுள்ள தவறை உணராமல் ஊராட்சி மன்றஅலுவலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெருமத்தூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் செல்லியம்மன் கோவில் பகுதியில் உள்ள சித்தேரி சுமார் 20 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாறும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று சம்மந்தப்பட்ட சித்தேரிக்கு பெருமத்தூர் ஊராட்சியை 100 நாள் திட்ட தொழிலாளர்கள் சென்று பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டதால் தொழிலாளர்கள் அனைவரும் மரத்தடியில் ஓய்வு எடுத்து கொண்ருந்தனர்.
அப்போது, பெரம்பலூர் மாவட்ட உதவி திட்ட இயக்குனர் கல்யாணி திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வின் போது தொழிலாளர்கள் வேலை செய்யாமல் ஓய்வு எடுத்து கொண்டிருந்ததும், வருகை பதிவேட்டில் குறிப்பிட்டிருந்த படி 290 தொழிலாளர்கள் பணியில் ஈடுபடாததும் தெரிய வந்தது.
இதனையடுத்து வருகை பதிவேட்டினை கைப்பற்றிய உதவி திட்ட இயக்குனர் கல்யாணி பணிக்கு வராத தொழிலாளர்கள் வருகை தந்ததாக வருகை பதிவேட்டில் குறிப்பிட்டதற்கு பணித்தள பொறுப்பாளரிடம் உரிய விளக்கம் அளித்திடும்படியும், அவரை வேறு ஊராட்சிக்கு இடம் மாற்ற வேண்டும் எனவும் வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து பணித்தள பொறுப்பாளர் வேறு ஊராட்சிக்கு மாற்றிட வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த 100 நாள் வேலை திட்டதொழிலாளர்கள் 150க்கும் மேற்ப்பட்டோர், 250 தொழிலாளர்களின் வருகை பதிவை ரத்து செய்ததையும், பெறக்கோரியும், பணித்தள பொறுப்பாளரை இடமாற்றம் செய்ய கூடாது என வலியுறுத்தியும் பெருமத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தகவலறிந்த வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனிச்சாமி (கிராம ஊராட்சி), சிவக்குமார் (வட்டார ஊராட்சி) மங்களமேடு போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.
உதவி திட்ட இயக்குனர் மேற்கொண்ட திடீர் ஆய்வின் போது பணியில் இல்லாத தொழிலாளர்களுக்கு வருகை பதிவேட்டில் ரத்து செய்தாதல் ஆத்திரமடைந்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் தங்கள் மீது உள்ள தவறை உணராமல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.