Perambalur: Petition to the collector to stop setting up of crusher and thar plants in Maruvathur village!
பெரம்பலூர் மாவட்டம், பேரளி அருகே உள்ள மருத்துவர் கிராமத்தில்
கிரஷர், தார்கலவை தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதை தடுத்து நிறுத்தி மக்களையும் விவசாயத்தையும் காக்க வேண்டும் என இன்று கலெக்டர் அலுவலகத்தில் திரளாக வந்து கலெக்டர் கற்பகத்திடம் மனு கொடுத்தனர்.
பேரளி ஊராட்சிக்கு உட்பட்ட மருவத்தூரில், முன்னாள் ஊராட்சி தலைவர் துரைக்கண்ணு தார் பிளாண்ட் தொழிற்சாலை அமைத்துளளார் அந்த தொழிற்சாலையின் பாதிப்பு சுமார் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு 1 கிலோமீட்டர் அளவிற்கு புகை காற்று மற்றும் கிரஷர் மாசுக்கள் அதிகமாக பரவி வரும் காரணமாக விவசாயத்துக்கும் மக்களுக்கும் பெரிய பாதிப்பை நோயை ஏற்படுத்துகிறது. இந்த புகைச்சல் காரணமாக நிலக்தில் வேலை செய்துக் கொண்டு இருந்த சிவமாலை என்பவருக்கு மூச்சுதினறல் ஏற்ப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. எம்.சாண்ட், பி.சாண்ட் பவுடர் தயாரிக்கும் கல் உடைக்கும் தொழிற்சாலை 2 உள்ளது. இந்நிலையில் மேலும் பேரளி முன்னாள் ஊராட்சி தலைவர் துரைக்கண்ணு என்பவர் மீண்டும் தார் பிளாண்ட் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும். அதனை தடுத்து நிறுத்தி பொதுமக்களின் சுகாதாரத்தையும், விவசாய நிலங்கள் மாசுபடுவதையும் தடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.