பெரம்பலூர் : பெரம்பலூர் ( தனி ) சட்ட மன்ற தொகுதி வேட்பாளராக திமுக கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் சமூக சமத்துவப்படை நிறுவனர் பி.சிவகாமி இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கலின் போது தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறி பாலக்கரை அருகே இருந்து ஊர்வலமாக புறப்பட்ட அவர்கள், அப்போது, ஆறு கார்களிலும், 20 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் , ஊர்வலமாக பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கோட்டாசியர் அலுவலகத்திற்கு வந்து அடைந்தனர். அங்கு கோட்டாசியர் வளாகத்தின் அருகே 3 கார்கள் மட்டுமே போலீசார் அனுமதித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் லட்சகணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகளின் வீடுகளில் கோடிகணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. கரூரை போன்று பெரம்பலூரிலும் பல பேர்கள் வயல்கள், குடோன்களில் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.
அதை சோதனையிட தேர்தல் அதிகாரிகளால் முடியவில்லை. மேலும், ஆளும் கட்சி, எதிர் கட்சிகளின் முக்கிய புள்ளிகளின் உறவினர்கள், ஆதரவாளர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகாரிகளாக பணி புரிந்து வருகின்றனர்.
கட்சியால் அரசு பணிக்கு வந்த பலர் தங்கள் கட்சிக்கு சாதகமாக செயல்படுகின்றனர். எனவே முறையான தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும், அல்லது அவர்களுக்கு தேர்தல் முடியும் வரை வேறு பணி வழங்க வேண்டும்.
மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் முறையான ஜனநாயக தேர்தல் நடக்க பாரபட்சமின்றி நடுநிலையோடு செயல் படக் கூடிய அதிகாரிகளை, அலுவலர்களை நியமிக்க மாற்றுக் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
வேட்பாளர் விவரம்:
பெரம்பலூரை சேர்ந்த சிவகாமி (ஐ.ஏ.எஸ்) 28 ஆண்டுகள் பணிபுரிந்து உள்ளார். 1955ம் ஆண்டு டிச.1 தேதி பிறந்த சிவகாமி 10 வகுப்பு பெரம்பலூர் புனித தோமினிக் பள்ளியிலும் , 12ம் வகுப்பு பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் (1972), திருச்சி ஹோலிகராஸ் கல்லூரியில் பி.ஏ வரலாறு (1976), ராணி மேரி கல்லூரி எம்.ஏ வரலாறு (1976) லும் பளின்று உள்ளார்.
1980 முதல் 2008 வரை இந்திய ஆட்சித் துறையில் பணி புரிந்து அவர் 2008 நவம்பர் மாதம் விருப்ப ஓய்வு பெற்றார். 2009 ஆம் ஆண்டு சமூக சமத்துவப்படை துவங்கிய திமுக கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்து பெரம்பலூர் தனித் தொகுதியில் வேட்பாளராக களம் கண்டு உள்ளார்.
பெரம்பலூரை பூர்விகமாக கொண்டு இருந்தாலும் சென்னையில் வசித்து அவருக்கு சுதன்ஆனந்த் என்ற மகனும் உள்ளார். கணவர் பெயர் போஸ் ஆனந்த். இவர் அக்கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார்.
கையில் ரொக்கமாக ரூ. 5 லட்சத்து 40 ஆயிரமும், இதர வகையில் 49 லட்சத்து 547 ரூபாய் மதிப்பு சொத்துக்களையும் வைத்துள்ளார். அவரது கணவர் ரொக்கமாக ரூ. 1 லட்சத்து 25 ஆயிரமும், இதர வகையில் ரூ. 67 லட்சத்து 13 ஆயிரத்து 801 மதிப்பிலும் சொத்துக்களை வைத்தள்ளதாக வேட்பு மனு தாக்ககலில் தெரிவித்துள்ளார்.
மேலும், பங்கு வர்த்தகம் மற்றும் இதர வகைகளில் ரூ. 4 கோடியே 31லட்சத்து 62 ஆயிரத்து 380 வேட்பாளர் பெயரிலும், வேட்பாளர் பெயரில் ரூ. 1 கோடியே 22 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் இவரது கணவர் பெயரிலும் சொத்துக்கள் உள்ளன. இது மட்டும் அல்லாமல் சென்னை பழவாக்கம் மற்றும் நீலங்கரையில் அசையா சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வேட்பு மனுவை பி.சிவகாமி அங்கு பணியில் இருந்த கோட்டாசியரிடம் மனுவை தாக்கல் செய்தார். அப்போது திமுக மாவட்ட செயலாளர் குன்னம். சி.ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சி தலைவர் வக்கீல் தமிழ்ச்செல்வன் உட்பட கூட்டணியினர் உடனிருந்தனர்.