Perambalur players won gold medals at South Indian taekwondo game || தென்னிந்திய அளவிலான தேக்வாண்டே விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்றவர்கள் வீராங்கனைகள் மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு

பெரம்பலூர் : தென்னிந்திய அளவிலான தேக்வாண்டோ விளையாட்டுப் போட்டிகள் 19.04.2017 முதல் 24.04.2017 வரை கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்றது.

இப்போட்டியில் கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, ஆகிய மாநில அணிகளும் மற்றும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணிகள் (கேரளா மற்றும் பெங்களுரு) இந்திய ராணுவ அணி ஆகிய அணிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அணி சார்பாக பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி தேக்வாண்டோ மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் இ.சிந்துஜா தங்கப் பதக்கத்தையும், ஸ்ரீநிதி வெண்கலப்பதக்கமும், செந்தமிழ் வெண்கலப்பதக்கமும் பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.

வெற்றிப் பெற்ற வீராங்கனைகள் மற்றும் தேக்வாண்டோ பயிற்றுநர் மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்வின்போது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. இராமசுப்பிரமணியராஜா, தேக்வாண்டோ பயிற்றுநர் ந. தர்மராஜன், கைப்பந்து பயிற்றுநர் இரா. வாசுதேவன் ஆகியோர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!