Perambalur Police DSP Saravanan presents prizes to the winners of examination at the VRM IAS Academy

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில், வி.ஆர்.எம். அகடாமி பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. அங்கு, டி.என்.பி.எஸ்.சி, மற்றும் குரூப் 1, குரூப்2 உள்ளிட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை அதிகாரிகள், வி.ஏ.ஓ, ஆசிரியர் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி மாணவர்களை வெற்றி பெற செய்து வருகிறது.

இந்நிலையில், தமிழ் நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் 2019-ல் நடத்திய இரண்டாம் நிலைக் காவலர் எழுத்துத் தேர்வில் பெரம்பலூர் வி.ஆர்.எம் ஐ..ஏ.எஸ் அகாடமியில் பயின்ற 20 மாணவர்களில் 18 பேர் தேர்ச்சி பெற்றனர். அதைதொடர்ந்து, அவர்களுக்கான சாதனையாளர்கள் நாள் விழா, நிறுவனர் அக்ரி. மாதவன் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் டி.எஸ்.பி சரவணன் கலந்து கொண்டார்.

யு.பி.எஸ்.சி. தேர்வில் முதல்நிலைத் தேர்வில் தேர்வாகி, முதன்மைத் தேர்வை சிறப்புற எழுதியுள்ள மாணவர் விமல்ராஜ்,டி.என்.பி.எஸ்.சி. குரூப் ஐ தேர்வில் முதல் நிலைத் தேர்வில் தேர்வாகியுள்ள மாணவர்கள் சேதுபதி, காருண்யா, சங்கர். ஐ.பி.பி.எஸ். வங்கித் தேர்வில் தேர்வாகி இந்தியன் வங்கியில் பணிபுரியும் காமராஜ், இரண்டாம் நிலைக் காவலர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற 18 மாணவர்களை வாழ்த்தி பரிசுகளை வழங்கிய அவர் பேசியதாவது:

மாணவர்கள் அனைவரும் விருப்பத்தடன் ஈடுபாடு கொண்டு படித்தால் முன்னேற்றம் கிடைக்கும் என்பதை உணர்ந்து முயற்சி செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து ஏழை மாணவர்களையும் அரசு அதிகாரிகளாக ஆக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் 2017 -ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிறுவனம் மாணவர்களுக்கு குறைவான கட்டணத்தில் தரமான கல்வியை வழங்குவதுடன் அமைதியான சூழலில் ஏசியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட வகுப்பறைகள், இருக்கைகள் ஆகிய வசதிகளுடன் நான்காம் ஆண்டில் விடுதி அடியெடுத்து வைப்பதற்கு வாழ்த்துவதுடன், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1, 2, 2ஏ, 4 வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் டி.ஆர்.பி. தேர்வில் வெற்றி பெறுவதற்காக சிறப்பு பயிற்சி அளிப்பதோடு, மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்களுக்கும் 50 சதவீத கட்டணச்சலுகை வழங்கப்படுவது பாராட்டுக்ககுரியது, என பேசினார். கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 250 பேர் அரசு தேர்வில் வெற்றி பெற்று பணிக்கு சென்றுள்ளதையும் பாராட்டினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிறுவன ஊழியர்கள், பயிலும் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!