Perambalur police help recover woman’s handbag with 15-pound jewelery and cellphone missing from bus

திருச்சி மாவட்டம். லால்குடி வட்டம் புறத்தாக்குடியை சேர்ந்த சதீஷ்குமார் மனைவி சத்யா நேற்று சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதற்கு திருச்சி சமயபுரத்தில் இருந்து கம்பம் – சென்னை செல்லும் அரசு பேருந்தில் ஏறி பெரம்பலூரில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிய போது, தனது குழந்தைகளையும், பொருட்கள் அடங்கிய பையையும் எடுத்துக் கொண்டு அவரது ஹேண்ட் பேக்கை மறந்துவிட்டு விட்டார்.

பின்னர் உடைமைகளை சரிபாரத்தபோது கைப்பையை தவறவிட்டு விட்டதை அறிந்தார், அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ செங்கதிர்செல்வன், தலைமைக் காவலர் சுரேஷ், காவலர் ரகுவரன் ஆகியோரிடம் நடந்ததை எடுத்து கூறினர்.

பின்னர் அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்ந்து அழைப்பு விடுத்த போலீசாருக்கு ஒரு கட்டத்தில் பேருந்தின் நடத்துனர் அந்த கைப்பையில் உள்ள செல்போனை எடுத்து பேசினார். பஸ் உளுந்தூர்பேட்டை வந்துவிட்டது என்றும் தெரிவித்தார்.

சத்யாவின் ஹேண்ட் பேக்கை பத்திரமாக இருப்பதாகவும், மீண்டும் பஸ் நாளை (இன்று) காலை 6.30 மணிக்கு பெரம்பலூர் வரும் என்றும், அப்போது
பெற்றுக் கொள்ளும்படியும் தெரிவித்தார்.

அதன் படி இன்று காலை அந்த பேருந்தின் நடத்துனர் ரவிச்சந்திரன் பத்திரமாக போலீசார் முன்னிலையில் ஒப்படைத்தை, மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட சத்யா ஊருக்கு சென்றார்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!