Perambalur police inspector arrested by anti-corruption police Trapped Crusher Owner !!

பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் இன்று காலை திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்ய்ப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அதில் முதற்கட்ட விசாரணையில் பெரம்பலூர் துறைமங்கலம் 3 ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். இவர் பெரம்பலூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான குவாரியில் பணியாளராக உள்ளார். செந்தில்குமாருக்கு சொந்தமான கோனேரிப்பாளையம் குவாரியில் இருந்து அளவிற்கு கற்கள் அதிகமாக தினமும் லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது.

அளவிற்கு அதிகமாக பாரம் லாரிகளில் ஏற்றி செல்வதால், சாலை சீரழிகிறது. அதனால் போலீசார் வழக்கு பதிந்து வந்த நிலையில், பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் பெர்னாண்டஸ் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் ரூ. 50 ஆயிரம் தருவதாக ஒப்புக் கொண்டதாக கூறப்படுறது. இன்று காலை லஞ்சப் பணம் கொடுக்க வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவரது உரிமையாளர் செந்தில்குமார் ஆலோசனையின் பேரில், பால்ராஜுவிற்கு தெரியாமல் பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவிற்கு தகவல் கொடுத்திருந்தார், அவர்களின் திட்டத்தின் பேரில், ரசாயனம் தடவிய ரூபாயை கொண்டு வந்து இன்பெக்டரிடம் கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பால்ராஜை கையும் களவுமாக பிடித்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு, அவரது வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

குற்றவாளிகளிடம் ஈவு இரக்கம், மற்றும் அவர்களிடம் இருந்து எதையும் பெறக்கூடாது என்பதற்கு இந்த சம்பவம் ஓர் சாட்சி. கடமையை செய்த இன்ஸ்பெக்டர் காசுக்கு ஆசைப்படாமல் இருந்திருந்தால், அளவிற்கு அதிகமாக கற்களை கொண்டு செல்லும் லாரிகளிடமிருந்து சாலைகளையும், அவரது வேலையும் காப்பாற்றி இருக்கலாம். ஏனென்றால் கொள்ளை அடிப்பவர்களுக்கும், குற்றவாளிகளுக்கும் அறம் (எத்திக்ஸ்) கிடையாது.

சகாயம் ஐ.ஏ.எஸ்.. தெரிவித்தது போல குற்றம் புரிபவர்கள், கொள்ளை அடிப்பவர்கள் அதிகார பலம், பொருளாதாரம், ஆள் பலங்களில் மிக வலுவாக இருக்கின்றனர். அவர்களை எதிர்ப்பது தற்போது சாதாரணம் அல்ல!!


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!