Perambalur police registered a case against AIADMK members who protested without permission!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி கல்குவாரி டெண்டர் கோருவதற்காக சென்ற பாஜக பிரமுகர்கள், கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் திமுகவினரால் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நேற்று முன்தினம் அதிமுக சார்பில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கழக அமைப்புச் செயலாளரும் மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன், முன்னாள் துணை சபாநாயகர் வரகூர். அருணாச்சலம், எம்.ஜி.ஆர், இளைஞரணி மாவட்ட செயலாளர் ராஜாராம், அமைப்புச் செயலாளர் ப.மோகன், மாவட்ட அவைத் தலைவர் குணசீலன், நகர செயலாளர் ராஜபூபதி, முன்னாள் சிதம்பரம தொகுதி எம்பி சந்திரகாசி ஒன்றிய செயலாளர்கள் ஆலத்தூர் கர்ணன், சிவப்பிரகாசம், சசிகுமார், ரவிச்சந்திரன், செல்வமணி, உதயம் ரமேஷ், செந்துறை அவைத் தலைவர் வடக்கு செல்வம், பேரூராட்சி அரும்பாவூர் வெங்கடாசலம், செயலாளர்கள் பூலாம்பாடி கண்ணன், குரும்பலூர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பபினர் வீரபத்திரன் உள்ளிட்ட 16 பேர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், அரசு அதிகாரிகளின் உத்தரவை மீறி பொதுமக்களின் போக்குவரத்திற்கு தடையை ஏற்படுத்தி அரசுக்கு எதிராக கோசம் போட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு உள்ளிட்ட 16 பேர் மீது 143, 341 (IPC) ஆகிய இரண்டு பிரிவுகளில் பெரம்பலூர் போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!