Perambalur police rescue girlfriends in Chennai who tried to become man!

கல்லூரி செல்வதாக கூறி, வீட்டை வெளியேறி ஆணாக மாற முயன்ற கல்லூரி மாணவிகளை சென்னையில், பெரம்பலூர் போலீசார் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தை சேர்ந்த இரு கல்லூரி மாணவிகள் பெரம்பலூர் – துறையூர் சாலையில் உள்ள கல்லூரிகளில் பி.ஏ ஆங்கிலம், மற்றும், பி.எஸ்.சி நர்சிங் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற இரு பெண்களும், மாலை நேரமாகியும் வீடு திரும்பாததால் தேடி பார்த்தனர். கிடைக்காததால், பெரம்பலூர் போலீசில் இரு மாணவிகளின் பெற்றோர்களும் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் தீவிர நடத்தி வந்தனர். அவர்களின் செல்போனை ஆய்வு செய்த போது, லாடபுரத்தில் உள்ள வேறு மாணவன் ஒருவரிடம், ஒரு மாணவி கொடுத்து விட்டு அவனது போனை வாங்கி சென்றிருப்பதது தெரியவந்தது. பின்னர் போலீசார் நடத்திய துரித விசாரணையில்:

காணாமல் போன இரு மாணவிகளும் குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 வகுப்பில் இருந்தே ஒன்றாக படித்து வந்த நெருங்கிய தோழிகள். தற்பொழுது துறையூர் சாலையில் உள்ள கல்லூரிகள் வாளகத்தில் இரு வெவ்வேறு கல்லூரிகளில் இருவரும் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் 05.04.22 ஆம் தேதி காலை 08:00 மணிக்கு கல்லூரிப் பேருந்தில் ஏறி கல்லூரி செல்வதாக கிளம்பிச் சென்ற மாணவிகள், கல்லூரி பேருந்தில் ஏறாமலும் கல்லூரிக்கு போகாமலும் வேறு எங்கோ போய் விட்டனர் என்பதும் தெரியவந்தது.

விசாரித்ததில் அதில் ஒரு பெண், பெண்களுக்குரிய குணாதிசயங்கள் இல்லாமல் ஆண்கள் போல் கையில் காப்பு போடுவதும் பூ,பொட்டு வைக்காமல் இருப்பதும்,ஆண்கள் அணிகின்ற செருப்பு அணிவதும், தலைமுடியை ஆண்கள் போல் அலங்கரிப்பதுமான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

செல்போனை ஆராய்ந்ததில் அதிலிருந்த புகைப்படங்கள் மற்றும் செல்போன் எண்களை தொடர்பு கொண்டு கேட்டபோது மேற்படி காணாமல் போன அவர்கள் இருவரும் சென்னை போரூர் ஓம்சக்தி நகரில் வசிக்கும் வீட்டில் தனது தங்கி இருப்பதாக கூறுகிறார். காணாமல் போன மாணவிகள் இருவரும் ஆண்களாக மாறுவதற்காக சென்னை வந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை ஒரு பெண் ஆணாக மாறும் ஆப்ரேசன் செய்ய இருந்த நிலையில் போலீசார் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து தடுத்து நிறுத்தினர். பின்னர் சென்னை நேற்றிரவு சென்ற போலீசார், அவர்களை மீட்டு கொண்டு இன்று பெரம்பலூரில் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பு வந்து காதல் வந்துள்ளது, இதனால் ஒருவர் ஆணாக மாறி, மற்றொருவரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டடிருந்தும் தெரியவந்தது. ‘

பள்ளி, கல்லூரி செல்லும், மாணவிகளின் நட்பை அவ்வப்போது சோதித்து கொண்டால், இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுத்து கொள்ள முடியும் என உளவியில் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!