Perambalur Police S.P orders to take strict action against those who disturb public peace during New Year celebrations!
புத்தாண்டு அன்று இளைஞர்களோ அல்லது சிறுவர்களோ சாலையில் பைக்குகளில் சாகசம் செய்வது, வேகமாக பயணிப்பது, சாலையின் நடுவே கேக் வெட்டுவது, இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வண்ணம் கவனக் குறைவாகவும் அதிவேகமாகவும் வாகனத்தை இயக்குதல் கூடாது. சாலைகளில் பட்டாசுகள் வெடிப்பது, மது அருந்திவிட்டு பொதுமக்களிடம் தொந்தரவு செய்யும் வகையில் நடந்து கொள்ளுவது, இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றுதல் கூடாது என்றும்,
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் எத்தகைய செயல்களிலும் இளைஞர்கள் ஈடுபடுதல் கூடாது என்றும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளியூருக்கு செல்லும் நபர்கள் தங்களது வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் முன்புறம் உள்ள அலமாரியிலோ அல்லது வீட்டின் முன்புறமுள்ள எந்த ஒரு பகுதியிலும் சாவியை வைத்துவிட்டு செல்லக் கூடாது, விடுமுறைக்கு நீண்ட நாட்கள் வெளியூருக்கு செல்லும் பொதுமக்கள் கட்டாயம் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவிட்டுள்ளார்.