Perambalur Police SP appeals to panchayat leaders to install surveillance camera in villages

பெரம்பலூர் மாவட்டத்தில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட அனைத்து ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள் ஆகியோர்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா கர்ணம் சுப்பிரமணியம் திருமண மண்டபத்தில் நேரடியாக சந்தித்து கிராமங்களில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது குறித்தும், காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கண்காணிப்பு கேமராக்களை அனைத்து கிராமங்களிலும் பொருத்தி குற்றங்கள் நடப்பதை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டு பிடிக்கவும், ஆலோசனை வழங்கியும், வாகன விதிகளை மதித்து தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்தும், 18 வயதுக்கு குறைந்தவர்கள் வாகனங்களை ஓட்டக் கூடாது என அறிவுறுத்தியும், மேலும் காவல்துறையின் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் படியும் பொங்கல் திருவிழாவை எந்தவித சட்ட ஒழுங்குப் பிரச்சனை இன்றி நடத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டுமாறும் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மற்றும் மங்களமேடு துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் நிலைய ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!