Perambalur police struggling to remove shop obstructing traffic at signal!

சிக்னலில் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் கடையை அகற்ற முடியாமல் தவிக்கும் பெரம்பலூர் போலீசார்!

பெரம்பலூர், அக். 10-

பெரம்பலூர் நகரில், ரோவர் ஆர்ச் – விளாமுத்தூர் பிரிவு சாலையில் உள்ள சிக்னல் வழியாகவே பழைய பேருந்து நிலையம், ஆத்தூர், பூலாம்பாடி, மலையாளப்பட்டி, அரும்பாவூர், ஆத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, துறையூர், நாமக்கல், கரூர் மார்க்கத்தில் வரும் வாகனங்கள் இந்த சிக்னலை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அந்தப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதி. அந்தப் பகுதியை சுற்றிலும், பள்ளிகள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், கறிக்கடைகள், டீக்கடைகள், மளிகை மற்றும் முக்கிய வங்கிகள் உள்ளது, இதற்கு வருபவர்களும் இந்த சிக்னலை கடந்து செல்ல வேண்டும், ஆயிரக்கணக்கான வாகனங்கள், ஆயிரக்கணக்கான பாதசாரிகள் இந்த சிக்னலை நாள்தோறும் கடந்து செல்கின்றனர்.

ஆனால், அங்கிருக்கும் சவுத் இந்தியன் பேங் முன்புறம் ஆட்டோ ஒன்றும், தள்ளுவண்டி ஒன்றும் நிரந்தரமாக நிறுத்தப்பட்டு பொதுமக்கள் ப்ரீ லெப்ட் செல்ல முடியாமல், கார்கள், பைக் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும், அப்பகுதியில் 3 புறம் பள்ளிகள் இருப்பதால் பள்ளி செல்லும் மாணவர்கள் இந்தப் பகுதியை கடக்கும் போது வாகனங்கள் மோதிவிடுமோ என்ற அச்சத்திலேயே அனுதினமும் கடக்கின்றனர்.

மேலும், இது குறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் பல முறையிட்டும், சில மணி நேரம் மட்டும் அகற்றப்பட்ட கடை மீண்டும் அந்த கடைகள் போக்குவரத்து குறுகலான அந்த பாலத்தின் மீது கடைகள் மீண்டும் சில மணி நேரத்தில் வந்து விடுகிறது.

நடவடிக்கை எடுக்கும் போலீசார் மீது, அரசியல் கட்சி முக்கிய பிரமுகர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் பொய் புகார் அளிப்பதாகவும், அரசியல் செல்வாக்கை பயன்படுத்துவதால், போலீசில் உள்ள உயர் அதிகாரிகள் கண்டும் காணததை போல் நடந்து கொள்கின்றனர். மருதைமலை பட காமடி போல கடைகாரர்கள் போலீசாரை பார்த்து சட்டப்படி என்ன செய்ய முடிந்தது என கொக்கறிக்கின்றனர்.

தமிழ்நாட்டு போலீசார் ஸ்காட்ந்து போலீசாருக்கு அடுத்தப்படியாக திறமை உள்ளவர்கள் என நினைத்து கொண்டு இருக்கின்றனர். ஆனால், நிலைமை வேறு மாதிரி ஆகி வருவதை சில போலீசார் வருத்தத்தில் உள்ளனர். எனவே, நடவடிக்கை எடுக்க முட்டுகட்டையாக இருக்கும் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு விசுவாகமாக இருப்பதை விட்டுவிட்டு பொதுமக்களுக்கு தாங்கள் செய்ய வேண்டிய கடமையை செய்து பொதுமக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தொடர்ந்து ஆயுத பூஜைக்கு அடுத்தடுத்து தொடர் விழாக்கள் வருவதால் பொதுமக்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

இதே போல, பார்க்கிங் வசதி இல்லாமல் சாலையில் வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்யும் ஸ்டேட் பேங், ராஜா ஸ்டோர் போன்ற கடைகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் இணைந்து உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!