பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இளம்பிள்ளை வாத நோயை முழுமையாக ஒழிக்க முதல் கட்டமாக கடந்த 17.01.2016 அன்று போலியோ சொட்டுமருந்து சிறப்பாக முகாம் நடத்தப்பட்டது.
இரண்டாம் கட்டமாக இன்று நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் 383 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியாh; மருத்துவமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆக மொத்தம் 383 மையங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்பட்டது.
இந்த பணியில் சுகாதார பணியாளர்கள், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், மருத்துவ பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள், செவிலியர் கல்லூரி மாணவிகள் என ஆக மொத்தம் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட நபர்கள் பணியில் ஈடுபடுபட்டனர்.