perambalur-co-opபெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் 2ம் அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இன்று வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் மற்றும் அங்காடி விற்பனையார்களுக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றவலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தில் ஈடுப்பட்டனர்.

பெரம்பலூரில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு துவங்கிய கோரிக்கை பேரணிக்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்து பேசுகையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் மற்றும் அங்காடி விற்பனையார்களுக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளைநிறைவேற்றவேண்டும். இல்லையென்றால் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் ரேஷன் கடைகளை மூடிவிட்டு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்படுவோம் என்றார்.

மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாவட்ட பொருளாளர் கோவிந்தசாமி, துணைதலைவர்கள் பழனிசாமி,அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச்செயலாளர்கள் கலியமூர்த்தி, திருமூர்த்தி உட்பட பலர் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பேசினர். இதில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் பேரணியாக சென்று கலெக்டர் நந்தகுமாரிடம் மனு கொடுத்து கலைந்து சென்றனர்.

இதில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர், விற்பனையாளர்கள் என 420பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் உள்ள 53 கூட்டுறவு வங்கிகளும், 180 ரேஷன் கடைகள் மற்றும் 91 பகுதிநேர ரேஷன் கடைகளும் மூடப்பட்டிருந்தது. இந்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதிக்குட்பட்டனர். மேலும் வங்கிபணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!