Perambalur Professor at the sickle to cut: the unidentity of the persons who shot the Police inquiry
பெரம்பலூர் அருகே பேராசியரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம், இவரது மகன் செந்தில்குமார் (வயது 38). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசியராக உள்ளார்.
நேற்றிரவு இரு சக்கர வாகனத்தில், எசனை – அனுக்கூர் சாலையில் உள்ள வயலுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது வழிமறித்த நான்கு பேர் செந்தில்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். இதில் தப்பிய செந்தில்குமாருக்கு கன்னம் மற்றும் சில பகுதிகளில் காயம் ஏற்பட்டது.
அப்பகுதியில் வந்தவர்கள் செந்தில்குமாரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையளாம் தெரியாத நபர்கள் செந்தில்குமாரை வெட்ட காரணம் என்ன? வந்த மர்ம நபர்கள் கூலிப்படையா என தீவரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி பேராசியரிரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.