Perambalur: Public demand to regulate the floor shops and trolley shops encroaching on the footpath!

பெரம்பலூர் நகர சாலையோர தரைக்கடைளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நாளுக்கு நாள் அவதிக்கு உள்ளாகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளுக்கு நாள் வாகனங்கள் பெருகிவரும் இந்த சூழ்நிலையில் தேவைக்கு ஏற்ப சாலைகளும் பராமரிக்கப்பட்டு மற்றும் அதற்கு ஏற்றவாறு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் சாலை விவரங்களில் தரைக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளது அந்த தரைக்கடைகளில் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

பெரம்பலூர் நகர் பகுதியில் குறுகிய சாலை உள்ள பகுதிகளிலும் தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி கடைகள் செயல்பட்டு வருகிறது கொரோனா காலங்களில் மொத்த மார்க்கெட் செயல்பட தடை விதிக்கப்பட்ட நிலையில் ஆங்காங்கே தரைக் கடையில் மூலம் பொது மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும் வகையில் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தற்போது வரை நகரப் பகுதியில் குறுகிய சாலை உள்ள பகுதிகளிலும் வாகனங்களில் தற்போது வரை அகற்றப்படாமல் அப்படியே வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கில் வாடகை செலுத்தி வரும் வியாபாரிகளுக்கு வியாபாரம் சற்று குறைவாகவே இருந்து வருகிறது.

மேலும், வாடகை செலுத்துவோர் கடைக்கு முன்பாக தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி அமைத்திருப்பதால் அவர்களின் வியாபாரம் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது,அதேபோல சலையோர கடைகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களும் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும், தரைக்கடைகள் தள்ளுவண்டிக் கடைகள் நாளுக்கு நாள் சாலையை நோக்கி நகர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வருவதால், உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்லுவதில் கூட தாமதமாகிறது. மேலும், நடைபாதையை ஆக்கிரப்பில் உள்ளதால், ஷேர் ஆட்டோ ஓட்டுனர் பயணிகள் பாதுகாப்பு கருதி நடுசாலையிலேயே பயணிகளை ஏற்றி விடுவதால் பின்னால் வரும் வாகனங்கள் வரிசைகட்டி நிற்கவேண்டி உள்ளது. இதனால், தேவையற்ற போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக நகரப் பகுதியில் உள்ள தரைக்கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளை நடைப்பாதையை விட்டு அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!