பெரம்பலூரில் புதிய தமிழகம் கட்சியின் களப்பணியாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு,ஒவ்வொரு மாவட்டம் தோறும் கடந்த 6ந்தேதி முதல் கணப்பணியாளர்கள்
மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தி வருகிறேன்.
இன்று பெரம்பலூரில் நடைபெற்ற கூட்டத்தில் 600க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.
அன்மைகாலமாக தமிழகத்தில் வாக்குகளை விலை பேசும் ஜனநாயக விரோத போக்கு நடைபெற்று வருகிறது. எனவே பணத்திற்காகவோ, இலவசத்திற்காகவோ ஓட்டு
போடக்கூடிய சூழலை உருவாக்காக கூடாது என்ற பிரச்சாரத்தை முன் கூட்டியே எடுத்து செல்லக்கூடிய வகையில் இக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு விதமான குறைபாடுகள் சொல்லப்பட்டது. குறிப்பாக மாவட்டம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ
கூடிய பகுதியில் குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை, கழிப்படம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை,
100 நாள் வேலை உறுதி திட்டத்தில் உயர்த்தி வழங்கப்படவில்லை. இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசும் கவனத்தில் கொண்டு மற்ற மாவட்டங்களில் வழங்குவதை போல உயாத்தி வழங்கிட வேண்டும். இன்று மாலை புதுக்கோட்டையிலும், நாளை காலை நாமக்கல், மாலை கரூரிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இதனைத்தொடர்ந்து வரும் மார்ச் மாதம் 6ந்தேதிக்கு பின்னர் சென்னையில் மாவட்ட, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோனை கூட்டம் நடைபெற
உள்ளது. இதில் வரும் சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்திய ஜனநாயம் வலுப்பெற வேண்டும் என்றால் கட்சி தாவல் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டு கடுமையாக்கப்பட்டு வலுப்பெற வேண்டும். கட்சி
தாவலை அரசியல் பண்பாடாக நான் கருதவில்லை.
முற்போக்கு இயக்கம் என்று சொல்லி கொண்டு இருக்கும் ஆட்சியில் தான் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெற கவுரவ கொலைகள் அதிகளவில் தமிழகத்தில் நடந்திருக்கிறது.
எனவே இது தமிழகத்திற்கும் திராவிட இயக்கத்திற்கும் ஒரு அவமானத்தை கொண்டு சேர்க்கக்கூடிய ஒரு செயலாகவே நான் கருதுகிறேன்.
மற்ற கட்சிகள் பூரண மதுவிலக்கை தேர்தல் கோஷமாக வைத்திருக்கிறார்கள். நாங்கள் வாழ்க்கை கோஷமாக வைத்திருக்கிறோம். நான் கட்சியை துவங்கிய போது
நாங்கள் சாராயம் வடிக்க மாட்டோம், குடிக்க மாட்டோம், விற்க மாட்டோம் என்று சபதம் ஏற்று தான் கட்சியை துவங்கினோம். ஆக 20 ஆண்டுகாலமாக மதுவுக்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களை புதிய தமிழகம் கட்சி மேற்கொண்டு வருகிறது.
வரக்கூடிய சட்டமன்ற தேர்தலிலும் பூரண மதுவிலக்கு மிக முக்கியமான அம்சமாக தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்று தெரிவித்தார்.