Perambalur: Request to bring the sewing room built for village women to use!
பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் கிராமத்தில் அரசு ரூ. 11. 56 லட்சம் மதிப்பில் கிராமத்து பெண்கள் வாழ்வாதாரம் உயர திட்டமிட்டு கட்டப்பட்டு வந்தது. தற்போது அந்த பணிகள் தொடர்ந்து கிடப்பில் உள்ளதால் திட்டத்திற்கான நோக்கம் கிராம பெண்களுக்கு கிட்டாமல் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அதனை கட்டுமான பணிகளை நிறைவவேற்றி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.