பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், கீழம்பெரம்பலூரை சேர்ந்த அப்பாஸ் (வயது 26), சிங்கப்பூர் சென்று வந்த இவர் இன்னும் இரு தினங்களில் திருணம் செய்ய உள்ளார்.
இந்நிலையில் அரியலூர் சென்று திரும்பி டூவிலரில் வந்து கொண்டிருந்த அப்பாஸ் அகரம் சீகூர் – அரியலூர் செல்லும் சாலையில் காரைப்பாடி பிரிவு அருகே சாலையை சீரமைக்க கொட்டப்பட்டிருந்த ஜல்லிக்கற்களின் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானர்.
இது குறித்து தகவல் அறிந்த மங்கலமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பாசின் உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.