Road blockade for drinking water near Perambalur!
பெரம்பலூர் அருகே குன்னம் கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்க கோரி, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் பெரம்பலூர்- அரியலூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சித் தலைவர் தனலட்சுமி மதியழகன், குன்னம் போலீசார் பேச்சு வார்த்தையில் நடத்தினர். அதில், டேங்கர் லாரியில் தண்ணீர் வினியோகம் செய்வதாக கொடுத்த உறுதியின் பேரில் கலைந்து சென்றனர்.