Perambalur: Robbery attempt at 2 consecutive ATMs: Hiding bank officials: Customers suspicious!!
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள எறையூர் சர்க்கரை ஆலை கிராமத்தில் செயல்பட்டு வரும் IOB கிளைக்குச் சொந்தமான ஏடிஎம்கள் வங்கி அருகிலும் மற்றொன்று பெருமத்தூர் சாலையிலும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் வங்கிக்கு அருகே செயல்பட்டு வரும் ஏடிஎம்மை நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் பார்த்துவிட்டு, வங்கிக்கு ஓடி சென்று தகவலை தெரிவித்தும் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத வங்கி அதிகாரிகள் அலட்சியமாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்தடுத்து ஏடிஎம்க்கு சென்ற வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் வங்கியை சூழ்ந்தனர்.
இதனால் வேறு வழி இல்லாமல் சம்பவம் குறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் பெயருக்காக புகார் ஒன்றை அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தடயங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வரும் நிலையில், அதே பகுதியில் பெருமத்தூர் சாலையில் பணம் டெபாசிட் செய்யும் வசதியுடன் செயல்பட்டு வரும் ஏடிஎம்மிலும் கொள்ளை முயற்சி நிகழ்ந்துள்ளது குறித்து வங்கி அதிகாரிகள் இதுவரை எவ்வித புகாரும் அளிக்கவில்லை!
அடுத்தடுத்து வங்கி ஏடிஎம் களில் நிகழ்ந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து கண்டும் காணாமல் வங்கி அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக வாடிக்கையாளர் தரப்பில் பல கோணங்களில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், வங்கி அதிகாரிகள் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.
ஏடிஎம்மில் நிகழ்ந்த இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தால் எறையூர் சின்னாறு பகுதியில் வங்கி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.