Perambalur: Rs 2.34 crore worth of welfare assistance in Kolakkanatham Village Public Relations Project Camp!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கொளக்காநத்தம் ஊராட்சியில், இன்று நடைபெற்ற கலெக்டரின் மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 436 பயனாளிகளுக்கு ரூ.2.34 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் க.கற்பகம், வழங்கினார்.
ஆலத்தூர் யூனியன் சேர்மன் என்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.
வருவாய்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலத்துறையின், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறையின், கூட்டுறவுத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை என மொத்தம் 436 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 34 லட்சத்து 8 ஆயிரத்து 883 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கற்பகம் வழங்கினார்.
ளக்காநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ராகவன் அரசு பணியாளர்கள், பொதுமக்கள் பயனாளிகள் திராளனோர் கலந்து கொண்டனர்.