Perambalur: Rs 2.77 crore college hostel in Veppur; Chief Minister M.K.Stalin inaugurated it.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இருந்து காணொலிக் காட்சி மூலம், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட வேப்பூரில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன், 2 கோடியே 77 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதனையடுத்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் குத்து விளக்கேற்றி விடுதியில் உள்ள வசதிகளை பார்வையிட்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
பெரம்பலூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சி.இராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், வருவாய் கோட்டாட்சியர் (பொ) சத்திய பாலகங்காதரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மரு.கருணாநிதி, வட்டாட்சியர் கோவிந்தம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.