Perambalur: Rs 3.35 lakh confiscated without documents!
பெரம்பலூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுகுணா தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் இன்று காலை 7 மணி அளவில் வாகன தணிக்கையின் போது பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்த தேவதாஸ் மகன் பிரகாஷ் (48) தனது டிராவல்ஸ் வேனுக்கு பாடி கட்டுவதற்காக கரூர் மாவட்டத்தில் உள்ள விஷ்ணு கேர் கம்பெனியில் முன் பணம் கொடுத்து விட்டிருந்த நிலையில் மீதி பாக்கி பணம் ரூ.3,34,950 யை கொடுப்பதற்காக, டிராவல்ஸ் வேனில் திண்டிவனத்தில் இருந்து கரூர் செல்லும்பொழுது, உரிய ஆவணங்களின்றி பணத்தை எடுத்துச் சென்றார். அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் அதை பறிமுதல் ஒப்படைத்தனர்.