Perambalur ruling party sex scandal: prosecutors protest to change to CBI

பெரம்பலூரில் ஆளும்கட்சி பிரமுகர் மீது பாலியல் புகார் அளித்த வக்கீலை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்தும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, வழக்கறிஞர் ப.அருள் என்பவர், ஆளும்கட்சி பிரமுகர் மற்றும் போலி நிருபர் ஆகியோர் சேர்ந்து நட்சத்திர விடுதி ஒன்றில் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறியதுடன் அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் உறவு கொள்ள வற்புறுத்தோடு, வெளியிட்டுவிடுதாக மிரட்டுவதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறதை அடிப்படையாக கொண்டு புகார் ஒன்றை போலீஸ் எஸ்.பியிடம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் அது தொடர்பான ஆடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். விசாரணை நடத்திய காவல் துறை வழக்கறிஞர் அருள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம், போலியாக ஆடியோ தயார் செய்தாகவும், குண்டர் சட்டத்தையும் பயன்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொண்ட வழக்கறிஞர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து கோசமிட்டதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குரல் கொடுத்த வழக்கறிஞர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும், பாலியல் புகார் வழக்கை சிபிசிஐடி நடத்த வேண்டும், காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் மீது விசாரணை நடத்த வேண்டும்,

நீதித்துறை சார்ந்த நீதிபதிகளை பலமுறை நீதிமன்ற சேம்பரில் வேலை நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் சந்திப்பது அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட நீதிமன்ற கண்காணிப்பு கேமரா காட்சிப்புதிவுகளை எதிர்காலத்திற்கு பாதுகாத்து வைக்கவும்,

வழக்கறிஞர்கள் தொழில் சுகந்திரம், சட்டப்பூர்வமான அரசியலமைப்பு, அனைத்தும் மீறப்பட்டு இருப்பதால் நீதிமன்ற புறக்கணிப்பு செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

 


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!