Perambalur: Sago manufacturing factory in Veppanthatta union: DMK candidate Arun Nehru promises!
பெரம்பலூர் எம்.பி தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு இன்று காலை பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்தில் உள்ள ஈச்சங்காடு, அரசலூர், அன்னமங்கலம், விசுவக்குடி, முகமதுப்பட்டினம், பிள்ளையார்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் தேர்தல் பிரசாரம் செய்து வாக்குகளை சேகரித்தார்.
பிரச்சாரத்தில் அருண்நேரு பேசியதாவது:
இந்தியாவிற்கே முன் மாதிரி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண் கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்தியாவிலேயே பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை கொடுத்தது கலைஞர் ஆட்சியில் தான். பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை திட்டம், அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் ஆகியவற்றை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார் முதல்வர்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத காலை உணவு திட் டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். திமுக ஆட்சியில் தான் பெரம்ப லூர் மாவட்டம் எறையூரில் சர்க்கரை ஆலை, நாரணமங்கலத்தில் டயர் தொழிற்சாலை, எறையூரில் ஷீ தொழிற்சாலை கொண்டு வரப்பட்டன. பெரம்பலூர் தொகுதியில் நான் வெற்றிபெற்றால் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும்.
மலையாளப்பட்டி, சுற்று வட்டார பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை கொண்டு ஜவ்வரிசி ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வேப்பந்தட்டை ஒன்றிய பகுதிகளில் செல்லும் கல்லாற்றில் தடுப்பணைகள்அமைக்கப்படும். விசுவக்குடி ஆதிதிராவிடர் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க
தொட்டி, முஸ்லிம்கள் அடக்க ஸ்தலத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படும், என வாக்குறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, தொண்டமாந்துறை, பூஞ்சோலை,கோரையாறு, தழுதாழை, அரும்பாவூர்,அ.மேட்டூர், மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்று, பெரியம்மாபாளையம், பூலாம்பாடி, கடம்பூர், கள்ளப்பட்டி, உடும்பியம், வெங்கனூர், கிருஷ்ணாபுரம், வெண்பாவூர், பாண்டகப்பாடி, கை.களத்தூர்,
பில்லாங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் அருண்நேரு திமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.