Perambalur: Sanguppettai Muthumariamman Chariot Festival, large number of devotees participate!
பெரம்பலூர் சங்குப்பேட்டை முத்துமாரியம்மன் தேர் திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக தேர் உலா வந்தது. இதில் மாவட்ட அறங்காவல் குழு தலைவர் கலியபெருமாள், கிராம காரியஸ்தர்கள் கண்ணபிரான், சரவணன், முன்னாள் நகராட்சி தலைவர் ரமேஷ், பூசாரி நீதி தவன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கிராம காரியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், பெரம்பலூர் மற்றும் பெரம்பலூர் சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.