பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகள் மற்றும் விடுதிகளில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
படாலூர், ஆலம்பாடி, லாடபுரம், களரம்பட்டி, அம்மாபாளையம் மற்றும் குரும்பலூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் மற்றும் விடுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் , மாணவ, மாணவிகளிடம் பள்ளியின் தரம் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
குரும்பலூர் அரசு ஆதிதிராவிடர் விடுதியில் சமைக்கப்பட்டிருந்த சாப்பாட்டின் தரம் குறித்து சாப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்தார். பின்னர், பள்ளிகளின் ஆசிரியர்களிடம் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் ஏதுமில்லாத அளவிற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் உள்பட பலர் உடனிருந்தார்.