Perambalur school student is the state’s first in the painting

பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 பயிலும் மாணவி ஜெயப்பிரியா(16). இவர் தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை சார்பில் பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் இயங்கிவரும் ஜவகர் சிறுவர் மன்றத்தில் ஓவியப்பயிற்சி பெற்றுவருகிறார்.

மதுரையில் சமீபத்தில் மாநில அளவில் ஜவகர் சிறுவர் மன்றங்களுக்கு இடையே நடந்த ஓவியப்போட்டியில் பங்கேற்று வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு ஓவியத்தை தத்ரூபமாக வரைந்து மாநில முதல்இடம்பெற்றார். அவருக்கு பதக்கமும், ரூ.10ஆயிரம் பரிசுக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டி, மகளிர் தின ஓவியப்போட்டி ஆகியவற்றில் மாவட்ட முதலிடம் பெற்றுள்ளார். மாநில அளவில் வெற்றி பெற்ற ஜெயப்பிரியாவிற்கும், அவருக்கு ஓவியப்பயிற்சி அளித்த ஓவிய பயிற்றுனர் ஹேமாஸ்ரீக்கும் கலை பண்பாட்டுத்துறை திருச்சி துணை இயக்குனர் குணசேகரன், பெரம்பலூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் அரணாரை நடராசன் ஆகியோர் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!