Perambalur: Schoolgirl commits suicide after mother condemns love! Lover absconding!!
பெரம்பலூர் அருகே பள்ளி மாணவியின் காதலை தாய் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள புதுக்குறிச்சியை சேர்ந்த பள்ளி மாணவி வயது 17 . பாடாலூரில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். 12ம் வகுப்பு பயில இருந்தார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த 22 வயது வாலிபருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
கடந்த 23 ம் தேதி மாணவியின் பிறந்த நாள் புகைப்படத்தை சமூக வலைத் தளத்தில் பதிவேற்றம் ஆனதை கண்ட சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த மாணவியின் தந்தை, அவரது மனைவியடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாணவியின் தாய் அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அந்த மாணவி நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலன் தலைமறைவாகி விட்டான்.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்விற்கா பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.