Perambalur: Sealed 3 shops that sold drugs like Gutka!
பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் அவரது குழுவினர், உணவு பாதுகாப்பு அலுவலர்களுடன் இணைந்து நடத்திய சிறப்பு சோதனையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்பனை செய்த கொளத்தூர், கொளக்காநத்தம், அயனாபுரம் ஆகிய கிராமங்களில் 3 பெட்டி கடைகளுக்கு மருவத்தூர் காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இணைந்து மேற்படி கடைகளுக்கு சீல் வைத்தனர்.
கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசனுக்கோ அல்லது எஸ்.பி ஆபிசுக்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும், என போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.