Perambalur: Seized Rs. 2 lakhs, due to showing the relevant documents, handed over!
மாவட்ட தேர்தல் அலுவலர் செயல்முறை ஆணையில் வாகனத் தணிக்கையின் போது பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் கைப்பற்றப்படும் பொருட்களை விசாரணை செய்து ஆதாரங்களின் அடிப்படையில் உரிய ஆவணங்கள் இருப்பின் விடுவிக்க திட்ட இயக்குநர்,ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்), மாவட்ட கருவூல அலுவலர் ஆகியோர்கள் உறுப்பினர்களாக கொண்ட குழுவிற்கு அதிகாரம் அளித்து ஆணையிடப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டிற்கான பாராளுமன்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 27- சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னம் சட்டமன்றத்தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் 19.03.2024 அன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சிறுகுடல் – கீழப்புலியூர் கிராம சாலையில் பைக்கில் வந்த நமையூரை சேர்ந்த தங்கராசு மகன் சங்கர் ஆவணம் ஏதுமின்றி எடுத்து வந்ததாக ரூ.2 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
சங்கர் எடுத்து வந்த ரூ.2 லட்சமானது, கீழப்புலியூர் இந்தியன் வங்கியிலிருந்து தமது சேமிப்பு கணக்கிலிருந்து எடுத்தத் தொகை என தெரிவித்து, அதற்◌ாக அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தார்.
ஆதாரங்கள் அடிப்படையில் அரசியல் சார்புடையது அல்ல என விசாரணையில் தெரிய வந்ததால், பறிமுதல் செய்யப்பட்ட தொகை எவ்விதத்திலும் தேர்தல் தொடர்பானதல்ல எனவும், எவ்வித முறைகேடுகளுக்கும் பயன்படுத்தக்கூடிய காரணம் ஏதும் இல்லை என சங்கரிடம் பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.2 லட்சத்தை திரும்ப தேர்தல் அலுவலர்கள் ஒப்படைத்தனர்.