Perambalur-Siruvachur Almighty School, National level Paralympic volleyball tournament will start tomorrow evening!
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் தேசிய அளவிலான பாராலிம்பிக் வாலிபால் போட்டி இன்று மாலை துவங்கிய 2 நாட்கள் நடைபெறுகிறது.
இது குறித்து தேசிய பாராலிம்பிக் வாலிபால் கூட்டமைப்பின் தலைவர் சந்திரசேகர், மாநில தலைவர் ராஜன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
தேசிய பாராலிம்பிக் வாலிபால் கூட்டமைப்பு, மாநில பாரா வாலிபால் சங்கம், மாவட்ட வாலிபால் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் தேசிய அளவிலான பாராலிம்பிக் வாலிபால் சேம்பியன்ஷிப் -2023 போட்டி சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் இன்று மாலை 6 மணியளவில் தொடங்குகிறது. போட்டியை பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் தொடங்கி வைக்கிறார்.
இந்த போட்டியில் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் என 3 வகையில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஜார்கண்ட், ராஜஸ்தான், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஹிரியானா, இமாச்சல பிரதேசம், தெலுங்கனா உட்பட 20 மாநிலங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
போட்டிகள் நடத்தப்பட்ட வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நாளை (8ம்தேதி) மாலையில் நடைபெறுகிறது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கவுள்ளார். போட்டிகான ஏற்பாடுகளை ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி தாளாளர் முனைவர் ஆ.ராம்குமார், துணை தலைவர் மோகனசுந்தரம் ஆகியோர் செய்துள்ளனர் என தெரிவித்தார்.