Perambalur – Siruvachur Almighty Vidyalaya Public School Students World Record Attempt; 21 minutes of transcendental meditation!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் இன்று காலை உலக சாதனை படைக்கும் முயற்சியில் சுமார் 700 மாணவர்கள் யோகா குருஜி கிருஷ்ணகுமார் தலைமையில் நடந்தது. பள்ளி சேர்மன் டாக்டர். ஆ. ராம்குமார் வரவேற்றார். ஞாபகத்திறன், கற்றல் திறன், தேர்வு பயம் போக்கவும், மாணவர் கைகளில் ரோஜா மலர்களை வைத்து கொண்டு 21 நிமிடங்கள் ஆழ்நிலை தியானத்தில் அமர்ந்து, பதஞ்சலி உலக சாதனை செய்தனர். பள்ளியின் முதல்வர்கள் ஹேமா, சாரதா, சந்திரோதயம், உள்ளிட்ட ஆசிரியர்கள், பள்ளி இயக்குனர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் தொடர்ந்து 21 நிமிடம் ஆழ்நிலை தியானம் மேற்கொண்டதற்கு கேடயம், பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது. மேலும், மாணவர்கள் 3 நாட்களில் தியானம் கற்றுக் கொண்டதற்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. தமிழ் ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.