Perambalur: Siruvachur Madurakaliamman temple Theppakulla drain will be repaired soon : BDO information.
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராம ஊராட்சியில் அமைந்துள்ள மதுர காளியம்மன் கோவில் தெப்பக்குளத்திற்கு நீர் ஆதாரம் எதிர்புறத்தில் உள்ள சின்ன ஏரி மற்றும் தெப்பகுளம் செல்லும் வாய்கால் முழுவதும் திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொது மக்களால் குப்பைகள் கொட்டப்பட்டு அடைப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, பருவமழை துவங்குவதற்கு முன்பாக கிராம ஊராட்சி நிர்வாகம் மூலமாக 15 தினங்களுக்குள் வரத்து வாய்கால் தூர் வாரி சீராமைக்கும் பணியும், அரச மரத்தடி குட்டை சுத்தம் செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கழிவுகளை / குப்பைகளை கொட்டுவதற்காக ஆங்காங்கே குப்பை தொட்டிகள் கூடுதலாக வைக்கப்பட உள்ளது.
குப்பை இங்கே கொட்டக் கூடாது / நீர் நிலை பாதுகாக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நிரந்தர பெயர் பலகை அமைக்கப்பட உள்ளது.
மேலும், அருகில் உள்ள கடைகளிலிருந்து வரும் கழிவுநீர், வடிக்கட்டிகள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு அதன் பின்னர் வரத்து வாய்க்கால் விடுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது. என பெரம்பலூர் பிடிஓ ஜெயராமன் தெரிவித்துள்ளார்.