Perambalur : Some of the hostel girls had diarrhoea; Collector Karpagam in person inspection!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் மிகவும் பிற்படுத்தப்படோர் நல மாணவியர் விடுதியில் தங்கியுள்ள மாணவிகளில் 3 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அவர்களை உடனடியாக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு விடுதி காப்பாளர் அழைத்து வந்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது, அனைத்து மாணவிகளும் நல்ல நிலையில் இருந்ததால் அவர்கள் மீண்டும் கல்லூரி விடுதிக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையறிந்த கலெக்டர் கற்பகம், உடனடியாக கீழக்கணவாய் பாலிடெக்னிக் மாணவியர் விடுதிக்குச்சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மாணவிகளுக்கு என்ன உணவு வழங்கப்பட்டது, உணவில் என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்பட்டது, உணவுப்பொருட்கள் தரமானதாக உள்ளதா என பார்வையிட்டு ஆய்வுசெய்த அவர், மாணவிகளிடம் உடல்நலன் குறித்து கேட்டறிந்தார்.

மாணவிகளுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்களிடம் தொலைபேசியில் பேசிய அவர், விடுதியில் வழங்கப்பட்ட உணவால் அவர்களின் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்தார்.

பின்னர், கல்லூரி வளாகத்தையும், விடுதியினையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் கல்லூரி முதல்வருக்கும், விடுதி காப்பாளருக்கும் அறிவுறுத்தினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!