பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கிராமத்தில் தாயின் இறுதி ஊர்வல வாகனம் மோதியல் மகனும் நேற்றிரவு உயிரிழந்தார்.
குன்னம் வட்டம் கிழுமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செங்கமுத்து மனைவி பொன்னம்மாள் (70). இவர் நேற்று இயற்கையாக மரணமடைந்தார். இவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை அந்த கிராமத்தில் நடந்தது. இறுதி ஊர்வல வாகனத்தின் ஓட்டுநர் எதிர்பாரத விதமாக வேகமாக ஓட்டியதால், அந்த வாகனம் ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது மோதி நின்றது.
இதில், இறந்து விட்ட பொன்னம்மாளின் மகன் முருகன் (40), வீரமுத்து மகன் குமார் (27), அத்தியூர் கிராமத்தை சேர்ந்த நாயத்தான் (60) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். வேப்பூர் வட்டார அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது முருகன் உயிரிழந்தார். குமாரும், நாயத்தானும் பெரம்பலூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, குமார் அளித்த புகாரின்பேரில் குன்னம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.