Perambalur: Special Camp for Transgenders: Collector Karpagam Information
பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, பெரம்பலூர் மாவட்டம், மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏதுவாக, சம்மந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இம்முகாமில் அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம் செய்தல், வாக்காளர் அடையாள அட்டை பெற்று வழங்குதல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 21.06.2024 அன்று திருநங்கையருக்காக நடைபெறும் சிறப்பு முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கையரும் பங்குபெற்று பயன்பெறலாம், என
தெரிவித்துள்ளார்.