Perambalur sports coach arrested for sexually harassing female students!

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி செய்து படிக்கும் மாணவிகளிடம் டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜ் என்பவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்ததோடு, புகாரால் தலைமறைவானவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

பாலியியல் தொந்தரவு குறித்து, மாணவிகள், மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமாரிடம் தகவல் தெரிவித்தும், அவர், அவர்களை சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளார். இந்த பாலியல் தொந்தரவு சம்பந்தமாக புகாராக கடந்த ஜூன் மாதம் புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட மாவட்ட விளையாட்டு துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், மேலும் இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட விடுதி மாணவிகள் நீதிபதிகளிடம் புகார் மனுவை அளித்தனர். பின்னர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் நன்னடத்தை அலுவலர் அலுவலரிடமும் தகவல் அளிக்கப்பட்டது. அதன் பெயரில் தொடர்பாக தகவல் அறிந்த, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் நன்னடத்தை அலுவலர் . கோபிநாத் அங்கு விசாரணை மேற்கொண்டு ஆய்வு நடத்தினர்.

இதில் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக, தர்மராஜன் விளையாட்டு விடுதி மாணவிகளிடம் பாலியல் ரீதியான தொந்தரவுகள் கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் டிசம்பர் மாதம் 7-ம் தேதி தர்மராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, ஆனால் அவர் மீது எந்த ஒரு துறை ரீதியான நடவடிக்கையும், காவல்துறையினர் நடவடிக்கையும் இல்லை என்பதால், பல்வேறு அமைப்பினர் சார்பில், சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்கவும், மேலும் அவர் மீது சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் இது குறித்து மனு அளித்தனர்.

தற்போது பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலராக இருந்த சுரேஷ் அரியலூர் மாவட்ட விளையாட்டு அலுவலராக மாற்றப்பட்டுள்ள நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், தலைமறைவான பயிற்சியாளர் தர்மராஜை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தலைமறைவாக இருந்த தர்மராஜனை பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் கைது செய்து நேற்றிரவு பெரம்பலூர் அழைத்து வந்தனர். டேக்வாண்டோ பயிற்சியாளரிடம், போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மராஜன் (33) கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை சேர்ந்தவர். தற்காலிக பயிற்சியாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!