Perambalur SP’s office again set fallen icon?
பெரம்பலூர் எஸ்.பி அலுவகத்தில் விழுந்து கிடக்கும் தமிழக அரசின் சின்னத்தை பொருத்த பொதுமக்கள் கோரிக்கை
பெரம்பலூர் எஸ்.பி அலுவலகத்தில் கடந்த டிச.5 ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மறைந்த நாளன்று அரைக் கம்பத்தில் கொடி இறக்கப்பட்டது. அன்று விழுந்த தமிழக அரசின் சின்னமும், காவல் துறையின் சின்னமாக மூன்று தலைகள் ஒருங்கிணைந்த சிங்க முகமும் கொண்ட லட்சினை கொண்ட சின்னம் இன்று வரை சுமார் 3 மாதங்களாகியும் பொருத்தப்படாமல் உள்ளது. தினமும் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு பணிக்கு வந்து செல்கிறார்கள். ஆனால், அவர்களது கடமை உணர்வு எந்தளவிற்கு உள்ளது என்பதை இதிலேயே தெரிந்து கொள்ளலாம்.