Perambalur stuck in the mud near the lake to bathe in the driver killed
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வேப்பூர் கிராமம் நடு தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 44) இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிப் பேருந்து ஒட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
தற்போது பள்ளி விடுமுறை என்பதால் ரவி வீட்டில் இருந்து உள்ளார். இன்று, வழக்கம் போல் ரவி தனது வயலுக்கு சென்று வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பும் வழியில் வேப்பூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார்
அப்போது ரவி குளித்து கொண்டிருக்கும் போது எதிர்பார விதமாக சேற்றில் சிக்கி தத்தளித்தபடியே அலறி உள்ளார். அவர் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஏரியில் இறங்கி காப்பாற்ற முயற்சித்தனர். அதற்குள் தண்ணீரில் மூழ்கி சம்பவ இடத்தில் மூச்சு திணறி ரவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுக் குறித்து வேப்பூர் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் கொடுத்த தகவலின் பேரில் குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவியின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து இறந்து போன ரவியின் மனைவி அஞ்சலை கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்த போன டிரைவர் ரவிக்கு தேவகிருஷ்ணன் (16) என்ற மகனும் அனுசியா (14) என்ற மகளும் உள்ளனர்.