Perambalur Sugar Mill, To start the coming Dec.10 Grinding Session, the meeting decided!
பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் சங்க கூட்டம் சர்க்கரை ஆலை கூட்ட அரங்கில் தலைமை நிர்வாகி என். கதிரேசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தலைமைக் கரும்பு அலுவலர் ரவிச்சந்திரன், துணைத்தலைமை ரசாயினர் பெரியசாமி, துணைத்தலைமைப் பொறியாளர் (பொருப்பு) நாராயணன், கணக்கு அலுவலர் ஜான்பிரீட்டோ, தொழிலாளர் நலவலுவலர் ராஜாமணி, மற்றும் பொறியியல் , ரசாயணப்பிரிவு ,கரும்பு அபிவிருத்தி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், 2021-2022 ம் ஆண்டுக்கான அரவை 10-12-2021 ம் தேதி துவங்குவதற்கான ஏற்ப்பாடு செய்யப்பட்டு, 107 நாட்கள் அரவை நடத்துவதற்கு திட்டமிட்டு, 6-4-2022ல்
ஆலை அரவையை முடிப்பதாகவும், 2022-2023ம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு சுமார் 10 ஆயிரம் ஏக்கர் கரும்பு பதியப்பட்டிருப்பதால், 3 லட்சம் டன் அரைப்பதற்கான திரன் கட்டமைப்பை கொண்டுள்ளது.
ஆலை வளாகத்தில் 70% பணிகள் முடிந்துள்ள நிலையில், ஆலை துவங்குவதற்குள் பணிகள் முடிக்கப்பட்டுவிடும் என்றும், பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு 65கோடியே 35 லட்சம் வழிவகை கடன் அனுமதிக்கப்பட்டு ரூ. 30 கோடி நிலுவையில் உள்ளது. கரும்பு வெட்டிய விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை அனைத்தும் வழங்கப்பட்டுள்ளதாகவும். சர்க்கரை இருப்பு 1,05,188 குவிண்டால் இருப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், விவசாயிகள் சார்பில் வைக்கப்பட்டு கோரிக்கைகளாளது:
எத்தனால் தயாரிக்கும் ஆலையை அரசு கொண்டுவர வேண்டும். பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு மற்ற ஆலைகள் தரவேண்டிய நிலுவைத் தொகையை உடனே பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இணைமின் திட்டத்திற்கு விவசாயிகளிடம் பெறப்பட்ட பங்குத்தொகைக்கு பத்திரம் வழங்க வேண்டும். சாலைகளின் குறுக்கே உள்ள மின்கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும். சாலைகளை மேம்படுத்த வேண்டும். டீசல் விலை உயந்துள்ளதால் வாகன வாடகையை உயர்த்தி கொடுக்க வேண்டும்.
வேட்டக்குடி கோட்டத்திற்கு அலுவலகம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கைகள் வைத்தனர்.
விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மு. ஞானமூர்த்தி, எ. கே. இராசேந்திரன், சீனிவாசன், வரதராஜன், பெருமாள், பச்சமுத்து, பாலகிருஷ்ணன், செல்வராசு டிராக்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் தேவேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.