Perambalur sugar mill young heated show
பெரம்பலூர் சர்க்கரைஆலை இளஞ்சூடேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு எறையூரில் அரசு பொதுத்துறை சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது.
பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் நடப்பு 2018-2019 ம் ஆண்டுக்கான அரவைப்பருவம் துவங்க உள்ளது. அதற்கான துவக்கமாக பாய்லர் “இளஞ்சூடேற்று நிகழ்ச்சி “ இன்று காலை 5மணிக்கு சர்க்கரை ஆலை வளாகத்தில், ஆலையின் தலைமை நிர்வாகி ஜினுலாப்தீன் தலைமையில் நடைபெற்றது.
நடப்பு ஆண்டு 2.5லட்சம் டன் கரும்பு அறைக்க திட்டமிடப்பட்டு தற்போது 2 லட்சம் டன் கரும்பு கையிருப்பு உள்ளதாகவும், 50 ஆயிரம் டன் கரும்பு வெளி ஆலைகளில் வாங்கலாம் என்னும் முடிவை நிர்வாகம் எடுத்துள்ளது.
கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் மு. ஞானமூர்த்தி , டிராக்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தேவேந்திரன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ராசேந்திரன், பி. சி. ஆர். , ஆலையின் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.