Perambalur: Swimming training; Collector Information!
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கு நீச்சல் குளத்தில், முதல் நீச்சல் கற்றுக்கொள்ளும் வகுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, 09.04.2024 அன்று காலை 6.30 மணி முதல் பேட்ச் தொடங்கப்படுகிறது.
முதல் பேட்ச் 09.04.2024 – 21.04.2024, 2வது பேட்ச் 14.04.2024 – 25.04.2024, 3வது பேட்சி 27.04.2024 – 08.05.2024, 4 பேட்ச் 10.05.2024 – 21.05.2024, 5வது பேட்ச் 23.05.2024 – 03.06.2024 ஆகிய 5 பிரிவுகளாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் எதிர்வரும் 09.04.2024 முதல் சிறப்பாக நடத்தபடவுள்ளது.
மேலும் பயிற்சி நேரம் காலை 7.00 – 8.00, 8.00 – 9.00 மணி வரை நீச்சல் பயிற்சி வகுப்புகளும், 9.00 மணி முதல் 10.00 மணி வரை பெண்களுக்கான நீச்சல் பயிற்சி வகுப்பும், 11.00 – 4.00 மணி வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், மாலை 4.00 – 5.00, 5.00 – 6.00 மணி வரை நீச்சல் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படவுள்ளது.
12 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். 12 நாட்களுக்கான LEARN TO SWIM COURSE பயிற்சி கட்டணம் ரூ. 1500+18% GST-270 = 1770 ஆகும். பயிற்சி கட்டணத்தினை Credit card, Debit Card or UPI மூலம் அலுவலகத்திலே செலுத்தலாம்.
கட்டணம் செலுத்த வரும்பொழுது ஆதார்கார்டு கொண்டுவர வேண்டும். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒரு நபருக்கு ஒரு மணிநேரத்திற்கான கட்டணம் ரூ.59/- ஆகும். நீச்சல்குளம் திங்கள் கிழமை மட்டும் விடுமுறையாகும். மேலும் விளையாட்டு அரங்கில் உள்ள உடற்பயிற்சி கூடம் பழுது பார்க்கப்பட்டு பயன்பாட்டிற்க்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடத்திற்கு மாத கட்டணம் ரூ. 590/- ஆகும்.
மேலும் ஏதேனும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்கள் (கைபேசி எண் – 74017 03516) மற்றும் நீச்சல்குள பயிற்சியாளர் (கைபேசி எண் – 88704 39645) ஆகியோர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.